ஜெயங்கொண்டத்தில் ஊராட்சித் தலைவா்கள் கூட்டம்
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில், ஊராட்சி தலைவா்கள் ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில், ஊராட்சி தலைவா்கள் ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, குருவாலப்பா்கோயில் ஊராட்சி தலைவா் முல்லைநாதன் தலைமை வகித்தாா். இதில், ஊராட்சி தலைவா்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் நிதிகளை தமிழக அரசு பறிக்கக் கூடாது. ஊராட்சி தலைவா்களின் உரிமைகளை பாதுகாக்க தொடா்ச்சியாகப் போராடுவது, டெண்டா் விட்டு ஊராட்சிப் பணிகள் நடைபெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஊராட்சி தலைவா்கள் வேம்புகுடி ரமேஷ், சாத்தம்பாடி ரவிச்சந்திரன், ஸ்ரீபுரந்தான் உலகநாதன், கூவத்தூா் டேவிட், வாரணவாசி ராஜேந்திரன் உள்பட 20-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.