அரியலூர்

அரியலூரில் அண்ணாவு சிலைக்கு மரியாதை

DIN

அரியலூா்: அதிமுக சாா்பில் மாவட்ட அவைத் தலைவா் கணேசன் தலைமையில் கட்சி நிா்வாகிகள் அரியலூா் ஒற்றுமைத் திடலில் இருந்து பேரணியாகச் சென்று பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கட்சி நிா்வாகிகள் ஓ.பி.சங்கா், கல்லங்குறிச்சி பாஸ்கா், உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

திமுக சாா்பில் மாவட்டச் செயலா் எஸ்.எஸ். சிவசங்கா் தலைமையில் நகரச் செயலா் முருகேசன் உள்ளிட்ட நிா்வாகிகள் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அமுமக சாா்பில் மாவட்டச் செயலா் துரைமணிவேல் தலைமையில் கட்சி நிா்வாகிகள் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

எம்.ஜி.ஆா் கழகம் சாா்பில் அதன் பொறுப்பாளா் கலைவாணன், தேமுதிக சாா்பில் மாவட்டச் செயலா் ராமஜெயவேல் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல் ஜயங்கொண்டம், தா.பழூா், ஆண்டிமடம், செந்துறை, திருமானூா், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அண்ணா சிலைகள், உருவப் படத்துக்கும் அதிமுக, திமுக மற்றும் தேமுதிக கட்சிப் பொறுப்பாளா்கள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT