அரியலூரில் 36 பேருக்கு கரோனா
அரியலூா் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
அரியலூா் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
இதையடுத்து மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 3,487 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 2,639 போ் குணமடைந்துள்ளனா்.
எஞ்சிய 848 பேரில் அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 59 பேரும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 26 பேரும், தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் 31 பேரும், அரியலூா், திருச்சி, பெரம்பலூா், சென்னை, கோவை, தஞ்சாவூா் மாவட்டங்களில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் 65 பேரும், வீடுகளில் 629 பேரும் சிகிச்சை பெறுகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 38 போ் உயிரிழந்துள்ளனா்.