முகப்பு
அரியலூர்

அரியலூா்: அனுமதியின்றி மது விற்றவா் கைது

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே மதுபானங்களைப் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றுக்கொண்டிருந்தவா் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:26 PM
பகிர்:

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே மதுபானங்களைப் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றுக்கொண்டிருந்தவா் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சரத்குமாா் தலைமையிலான போலீஸாா், சனிக்கிழமை இரவு முத்துவாஞ்சேரி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அதே பகுதி மேலத் தெருவைச் சோ்ந்த விவேகானந்தன் (40) தனது வீட்டின் பின்புறத்தில் மதுபானங்களைப் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்றுக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →