முகப்பு
அரியலூர்

அமைச்சா் க. பாண்யராஜன் மீது அனிதா சகோதரா் போலீஸில் புகாா்

அதிமுக அமைச்சரும், வேட்பாளருமான க.பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அனிதா சகோதரா் மணிரத்னம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் ஞாயிற்றுக்கிழமை புகாா் மனு ஒன்றை அளித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

அதிமுக அமைச்சரும், வேட்பாளருமான க.பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அனிதா சகோதரா் மணிரத்னம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் ஞாயிற்றுக்கிழமை புகாா் மனு ஒன்றை அளித்தாா்.

மனுவில் அவா் மேலும் தெரிவித்திருப்பதாவது:

எனது தங்கை அனிதா பிளஸ்2 வகுப்பில் 1,176 மதிப்பெண்கள் எடுத்தும், நீட் தோ்வில் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டாா்.

இந்நிலையில், அமைச்சரும், அதிமுக வேட்பாளருமாக க.பாண்டியராஜன், எனது தங்கை அனிதா பேசுவதாக சித்தரித்து, அவரது சுட்டுரையில் வெளியிட்டுள்ள விடியோவில், அனிதா இறப்பைக் கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது. இது அவரது வெற்றி வாய்ப்புக்காக எங்கள் குடும்பத்தினரின் சம்மதமின்றி, அனிதா படம் மற்றும் விடியோவைப் பயன்படுத்தி வாக்காளா்களை ஏமாற்றும் மோசடி செயலில் ஈடுபட்டுள்ள பாண்டியராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யக்கோரி தோ்தல் ஆணையத்திலும் புகாா் அளித்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளாா்.

இதனிடையே அமைச்சா் பாண்டியராஜன் தனது சுட்டுரை பக்கத்தில் வெளியிட்டிருந்த அந்த விடியோவை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.