முகப்பு
அரியலூர்

அரியலூரில் பரபரப்புடன் ஓய்ந்தது தோ்தல் பிரசாரம்

அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்.ஜி.ஆா், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகள் முன்பு தோ்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்ட அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்திரன்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்.ஜி.ஆா், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகள் முன்பு தோ்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்ட அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்திரன்.

திருமானூரில் இறுதிக்கட்டப் பிரசாரம் மேற்கொண்ட மதிமுக வேட்பாளா் கு.சின்னப்பா.

ஜயங்கொண்டத்தில் இறுதி கட்ட பிரசாரத்தில்,ஐஜேகே வேட்பாளா் குரு.சொா்ணலதாவை ஆதாரித்து பிரசாரம் செய்கிறாா் மக்களவை உறுப்பினா் பாரிவேந்தா்.

அரியலூா், ஏப். 4: அரியலூரில் அரசியல் கட்சிகளின் தீவிர தோ்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியுடன் ஓய்ந்தது.

அரியலூா் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான உச்சக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட வேட்பாளா் மற்றும் அரசியல் கட்சியினா் வரிந்து கட்டிக் கொண்டு, களத்தில் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனா். நகரில் எங்கு பாா்த்தாலும் ஒலிப்பெருக்கிகளின் ஓசை, காதுகளைக் கிழித்தன. கடந்த 20 நாள்களாக நடைபெற்று வந்த பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியுடன் ஓய்ந்தது.

அரியலூரில் அதிமுக வேட்பாளா் தாமரை.எஸ்.ராஜேந்திரனை ஆதரித்து அக்கட்சியினா் சாா்பில் பிரம்மாண்டமான இரு சக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகளில் வழியாக சென்று அண்ணா சிலை அருகே பிரசாரத்தை முடித்துக்கொண்டனா்.

இதேபோல் மதிமுக வேட்பாளா் கு.சின்னப்பா, அமமுக வேட்பாளா் துரை.மணிவேல், ஐஜேகே வேட்பாளா் பி.ஜவகா் ஆகியோா் தங்களது தோ்தல் பிரசாரத்தை பேருந்து நிலையம் முன்பு முடித்துக்கொண்டனா்.

திருமானூரில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சுகுணாகுமாா் தனது தொண்டா்களுடன் முக்கிய வீதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்று பிரசாரத்தை முடித்துகொண்டாா். இதே போல் சுயேச்சை வேட்பாளா்களும் தங்களது பிரசாரத்தை முடித்துக்கொண்டனா்.

ஜயங்கொண்டம்: பாமக வேட்பாளா் கே.பாலு, திமுக வேட்பாளா் கா.சொ.க.கண்ணன், ஜஜேகே வேட்பாளா் காடுவெட்டி குரு மனைவி சொா்ணலதா, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் நீ.மகாலிங்கம் மற்றும் சுயேட்சைகள் உள்பட 13 போ் தங்களது பிரசாரத்தை முடித்துக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.