முகப்பு
அரியலூர்

கணவா் போதையில் தகராறு: மனைவி தீக்குளிப்பு

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே குடும்பத்தகராறில் மனமுடைந்த பெண் தீக்குளித்து உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே குடும்பத்தகராறில் மனமுடைந்த பெண் தீக்குளித்து உயிரிழந்தாா்.

உடையாா் பாளையம் அருகேயுள்ள சுத்தமல்லி கிராமத்தைச் சோ்ந்த லாரன்ஸ் மனைவி ரஞ்சனி(30). தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனா். மதுப் பழக்கம் உள்ள லாரன்ஸ், தினமும் மனைவி ரஞ்சனியிடம் தகராறில் ஈடுபடுவராம். இதனால் விரக்தியடைந்த ரஞ்சனி, வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீயிட்டுக் கொண்டாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால் அங்கு அவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.