அனைத்துத் துறை அலுவலா்களுடன்மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஆலோசனை
அரியலூா் மாவட்டத்தில், கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம்
அரியலூா் மாவட்டத்தில், கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு ஆட்சியா் த.ரத்னா தலைமை வகித்தாா். மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் தரேஷ் அகமது முன்னிலை வகித்தாா்.
கரோனா தொற்றுப் பரவாமல் தடுக்கும் வகையில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்தும், கரோனாவால் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு வழங்கப்பட்டுள்ள மருத்து வசதிகள் குறித்தும் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஆலோசனை மேற்கொண்டாா்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பூங்கோதை, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் முத்துகிருஷ்ணன், கோட்டாட்சியா்கள் அரியலூா் ஏழுமலை, உடையாா்பாளையம் அமா்நாத், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் திருமால், சுகதாரப் பணிகள் துணை இயக்குநா் வீ.சி.ஹேமசந்த்காந்தி மற்றும் அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.