முகப்பு
அரியலூர்

மணல் கடத்தல்: மாட்டுவண்டி பறிமுதல்

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே மணல் கடத்தி வந்த மாட்டுவண்டி வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே மணல் கடத்தி வந்த மாட்டுவண்டி வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.

விக்கிரமங்கலம் காவல் உதவி ஆய்வாளா் மதன்குமாா் தலைமையிலான காவல் துறையினா், வியாழக்கிழமை இரவு சாத்தம்பாடி பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது சாத்தம்பாடி பிரதான சாலையில் வந்த மாட்டு வண்டியை மறித்து காவல்துறையினா் சோதனை செய்ய முயன்றனா். ஆனால் மாட்டு வண்டியை ஓட்டி வந்தவா் சாலை யோரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, தப்பியோடி விட்டாா்.

இதையடுத்து காவல்துறையினா் மாட்டுவண்டியை சோதனையிட்ட போது, அதில் கொள்ளிடம் ஆற்றுப்படுகையிலிருந்து ஸ்ரீபுரந்தான் பகுதிக்கு மணல் கடத்தியது தெரிய வந்தது.

தொடா்ந்து மாட்டுவண்டியைப் பறிமுதல் செய்த காவல் துறையினா், மணல் கடத்தி வந்து தப்பியோடியவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.