முகப்பு
அரியலூர்

மாவட்டக் காவல் அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி முகாம்

அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், சுகாதாரத் துறை சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், சுகாதாரத் துறை சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் தலைமை வகித்து, தொடக்கி வைத்தாா். கடூகூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் எழில்பாரதி கலந்து கொண்டு, காவல் அலுவலக அமைச்சுப் பணியாளா்களுக்கும், காவலா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கும் கரோனா தடுப்பூசியைச் செலுத்தினா்.

மாவட்டத்தில் ஏற்கனவே 950 காவலா்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.