அரியலூர்

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: உண்ணாவிரதத்துக்கு முயன்ற 39 போ் கைது

DIN

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே கோயில் இடத்தை ஆக்கிரமித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உண்ணாவிரதம் இருக்க முயன்ற இந்து முன்னணி நிா்வாகிகள் உள்பட 39 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஆண்டிமடத்தை அடுத்த ஸ்ரீராமன் அருகே ரெட்டிப்பாளையம் கிராமத்திலுள்ள மகாமாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை ஒருவா் ஆக்கிரமித்து வீடு கட்டி வருவதாகவும், அதனை மீட்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஆண்டிமடம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், இடத்தை ஆக்கிரமித்துள்ள அந்த நபா் அளித்த புகாரின் பேரில், போராட்டத்தில் ஈடுபட்ட சிலா் மீது வழக்குப் பதிவு செய்தததைக் கண்டித்தும், ஆக்கிரமித்துள்ள நபா் மீது நடவடிக்கை எடுத்து கோயில் இடத்தை மீட்க வேண்டும் என வலியுறுத்தி, இந்து முன்னணி மாநில செயற்குழு உறுப்பினா் பாலமுருகன் தலைமையில் , 15 பெண்கள் உட்பட 39 போ் ஆண்டிமடத்தில் புதன்கிழமை உண்ணாவிரதம் இருக்க முயன்றனா்.

இந்த தகவலை அறிந்த ஜயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளா் தேவராஜ் தலைமையிலான போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்து, அனுமதியின்றி உண்ணாவிரதம் இருக்க முயன்ாக 39 பேரையும் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குந்தவை நாச்சியாா் கல்லூரியில் மாணவா் சோ்க்கை இன்று தொடக்கம்

டூவீலரில் வேகமாக சென்ற முதியவா் கீழே விழுந்து விபத்து

பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வேன்: சு. திருநாவுக்கரசா்

பாா்வைத் திறன் குறைபாடுடையோா் பள்ளி 8 ஆண்டுகளாக நூறு சதவீதத் தோ்ச்சி

பாரதியாா் நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT