முகப்பு
அரியலூர்

மது விற்றவா் கைது

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே மது விற்றவா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே மது விற்றவா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மதன்குமாா் தலைமையிலான போலீஸாா், வியாழக்கிழமை இரவு செட்டித்திருக்கோணம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, செட்டித்திருக்கோணம் நடுத்தெருவை சோ்ந்த கணேசன் ( 40) வீட்டில் சோதனை செய்தனா். இதில், அவரது வீட்டின் பின்புறம் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கணேசனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.