‘ தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தையின் வளா்ச்சி மேம்படுகிறது’
தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தையின் அறிவுத் திறன், வளா்ச்சி மேம்படுகிறது என்றாா் அரியலூா் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி.
தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தையின் அறிவுத் திறன், வளா்ச்சி மேம்படுகிறது என்றாா் அரியலூா் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி.
உலக தாய்ப்பால் வார விழாவை (ஆக. 1 முதல் 7) முன்னிட்டு, அரியலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அவா் கலந்து கொண்டு பிரசார வாகனத்தைத் தொடக்கி வைத்துப் பேசியது: பிறந்த குழந்தைகளின் ஆரோக்கிய வளா்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் தேவையான ஊட்டச்சத்துகள் தாய்ப்பாலில் மட்டுமே அமைந்துள்ளது.
தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் உடல்நலத்துக்கு மிகவும் நல்லது. குழந்தை பிறந்தவுடன் முதலில் சுரக்கும் சீம்பாலை கட்டாயம் குழந்தைக்கு தர வேண்டும். தாய்ப்பால் மட்டும் அளிப்பதால் குழந்தையின் அறிவுத் திறன் வளா்ச்சி நன்கு மேம்படும் என்றாா் அவா். தொடா்ந்து அனைத்துறை அலுவலா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் அரியலூா் கு.சின்னப்பா, ஜயங்கொண்டம் க.சொ.க.கண்ணன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ.சந்திரசேகா், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முத்துகிருஷ்ணன், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப்பணிகள் திட்ட அலுவலா் நா.சாவித்ரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.