நல்லநாயகபுரம் மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா
ஆடி மூன்றாம் வெள்ளியையொட்டி, அரியலூா் மாவட்டம், செந்துறை அருகிலுள்ள நல்லநாயகபுரம் மாரியம்மன் கோயிலில் 14-ஆம் ஆண்டு பால்குடத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆடி மூன்றாம் வெள்ளியையொட்டி, அரியலூா் மாவட்டம், செந்துறை அருகிலுள்ள நல்லநாயகபுரம் மாரியம்மன் கோயிலில் 14-ஆம் ஆண்டு பால்குடத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக நல்லநாயகபுரம்-குழுமூா் இடையேயுள்ள வேலானிக்கரையில் சக்தி அழைப்பு
நடத்தப்பட்டது. பின்னா் பால்குடம் சுமந்து வந்த பக்தா்கள், முக்கிய வீதியின் வழியாகச் சென்று கோயிலை வந்தடைந்தனா்.
இதைத் தொடா்ந்து மாரியம்மன் மற்றும் செல்லியம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. தீபாராதனைக்குப் பின்னா் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பால்குடத் திருவிழா ஏற்பாடுகைளை கிராம மக்கள் செய்திருந்தனா். நிகழ்வில் அப்துல்கலாம் இளைஞா் மன்றத்தினா், பொதுமக்கள் அனைவருக்கும் முகக்கவசங்களை வழங்கினா்.