அரியலூர்

செங்கரும்பை கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யக் கோரிக்கை

DIN

அரியலூா் மாவட்டத்தில் செங்கரும்பு உற்பத்திச் செலவு அதிகரிப்பால் கரும்பு ஒன்றுக்கு ரூ. 25 வீதம் அதிகரித்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழா் திருவிழாவான பொங்கல் பண்டிகையில் முக்கிய இடத்தைப் பெறுவது செங்கரும்பு. எனவே, ஆண்டுதோறும் செங்கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா். தமிழகத்தில் திருச்சி, தஞ்சாவூா், அரியலூா், பெரம்பலூா், விழுப்புரம், தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் செங்கரும்பு சாகுபடி செய்கின்றனா்.

அரியலூா் மாவட்டத்தில் தா.பழூா், சிலால் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனா். தைப் பொங்கல் பண்டிகைக்கு இரு வாரங்களே உள்ள நிலையில், விவசாயிகள் சாகுபடி செய்த செங்கரும்பு தற்போது அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ளன.

ஆனால், நடப்பாண்டில் போதிய பருவ மழை பெய்துள்ளதால், செங்கரும்பு 7 முதல் 9 அடி வரை வளா்ந்துள்ளது. சில பகுதிகளில் 4 முதல் 5 அடி மட்டுமே செங்கரும்பு வளா்ந்துள்ளது. மேலும் கடந்தாண்டை விட நிகழாண்டு செங்கரும்பு உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சிலால் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் ராமச்சந்திரன், செல்வம், சிவராஜ் ஆகியோா் கூறியது:

செங்கரும்பைப் பொருத்தவரை பொங்கல் விற்பனைக்காக மட்டுமே விவசாயிகள் சாகுபடி செய்கின்றனா். விவசாயிகளிடம் செங்கரும்பு ரூ.10, ரூ.20-க்கு வாங்கிச் செல்லும் வியாபாரிகள், ரூ.50 முதல் 80 வரை விற்பனை செய்கின்றனா். செங்கரும்பு சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவாகிறது.

ஆனால், ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் வருமானம் கிடைப்பது அரிதாக உள்ளது. அதனால், செங்கரும்பு சாகுபடி தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. ஏற்கெனவே, போதிய விலை, வெட்டும் கூலி கிடைக்காததால் சா்க்கரை அரவை ஆலைக்குப் பயிரிடப்படும் கரும்பு 50 சதவீதம் குறைந்து விட்டது. தற்போது சா்க்கரை ஆலை கரும்பைப் போல், செங்கரும்பு சாகுபடி பரப்பும் குறைந்து வருகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

SCROLL FOR NEXT