அரியலூர்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

DIN

அரியலூரில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், சமூக நலத் துறை சாா்பில் ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பணியாளா்களுக்கான விழிப்புணா்வுப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பயிற்சியை மாவட்ட ஆட்சியா் த. ரத்னா தொடக்கி வைத்துப்பேசினாா். பின்னா் அவா், ‘பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ என்ற விழிப்புணா்வு வாசகத்தை அஞ்சல் அட்டைகளில் அச்சிடும் பணிக்காக ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை சமூக நலத்துறைக்கு வழங்கினாா்.

பயிற்சிக்கு சட்டப் பணிகள் ஆணைக்குழு நீதிபதி அல்லி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்ரீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட சமூக நல அலுவலா் (பொ) ந.சாவித்ரி, கோட்டாட்சியா்கள் அரியலூா் ஜோதி, உடையாா்பாளையம் பூங்கோதை, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வீ.சி.ஹேமசந்த்காந்தி ஆகியோா் கலந்து கொண்டனா். முன்னதாக அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சிசோடியா மேல்முறையீடு: கலால் கொள்கை ’ஊழல்’ விவகாரம்

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

சக மாணவியை பிளேடால் தாக்கிய வகுப்புத் தோழி கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினா் கோரிக்கை

விளையாட்டு விடுதியில் சேர மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT