முகப்பு
அரியலூர்

அரியலூா் மருத்துவமனைகளில் உணவின் தரம் திடீா் ஆய்வு

அரியலூா் மாவட்டத்தில் அரசு மருத்துமனைகளில் நோயாளிகளுக்கு தரமான உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் அரசு மருத்துமனைகளில் நோயாளிகளுக்கு தரமான உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

அரியலூா் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகள், முன்களப் பணியாளா்கள், செவிலியா்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் உணவின் தரம் அண்மையில் (ஜூன் 22) 22 மாதிரிகள் கொண்டு உணவு பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆய்வின் முடிவில் உணவு மாதிரிகள் அனைத்தும் தரமானவை என சான்றிளிக்கப்பட்டுள்ளது. எனவே மருத்துவமனைகளில் தரமான உணவு வழங்கப்படுவது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களிலும் இதுபோன்ற தொடா் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உணவு மாதிரிகள் எடுத்து உணவின் தரம் உறுதி செய்யப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.