FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சென்னை மதுரவாயலில் ரூ. 5 கோடி பணம் பறிமுதல்!

சென்னை மதுரவாயலில் ரூ. 5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பற்றி..

Updated On : 28 மார்ச் 2026, 12:39 pm IST
கோப்புப் படம் - ANI
பகிர்:

சென்னை மதுரவாயலில் உரிய ஆவணங்கள் இன்று கொண்டுவரப்பட்ட ரூ. 5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதன்படி, தனிநபர் ஒருவர் எவ்வித ஆவணங்களும் இன்றி ரூ. 50,000 வரை ரொக்கமாக எடுத்துச் செல்லலாம்.

அதற்கு மேலாக உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பிற பொருள்கள் தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

இதற்காக தேர்தல் செலவினக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது முதல் தமிழகத்தில் இதுவரை ரூ. 270 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து இன்று சென்னை மதுரவாயலில் தேர்தல் பறக்கும் படை சோதனையின் போது தனியார் ஏஜென்சி வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

டாஸ்மாக் கடைகளில் வசூலான பணம் என கூறப்பட்ட நிலையில் அலுவலகத்தில் இருந்து உரிய ஆவணம் கொண்டு வந்ததை அடுத்து அதுதொடர்பாக அதிகாரிகள் சரிபார்த்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

summary

Rs. 5 crore cash seized in Maduravoyal, Chennai by election flying squad

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments