FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சென்னை விமான நிலையத்தில் ரூ.4.5 கோடி உயர்ரக கஞ்சா பறிமுதல்

தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.4.5 கோடி மதிப்பிலான 4.5 கிலோ உயர்ரக கஞ்சாவை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

Updated On : 22 ஜூலை 2026, 1:33 am IST
சென்னை விமான நிலையம் - கோப்புப் படம்
பகிர்:

தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.4.5 கோடி மதிப்பிலான 4.5 கிலோ உயர்ரக கஞ்சாவை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

தாய்லாந்து நாட்டிலிருந்து விமானங்களில் சென்னைக்கு போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, சென்னை சா்வதேச விமான நிலையத்தில், அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு தாய்லாந்து நாட்டுத் தலைநகா் பாங்காக்கில் இருந்து, தனியாா் பயணிகள் விமானம், சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். அப்போது, தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளாகச் சென்று விட்டு திரும்பிய தமிழகத்தைச் சோ்ந்த 2 இளைஞா்களை சந்தேகத்தின் அடிப்படையில் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினா். அவா்களின் சூட்கேஸ்களுக்குள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் பொட்டலங்கள் போன்று ரூ.4.5 கோடி மதிப்பிலான 4.5 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் பயணிகள் இருவரையும் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

விசாரணையில், அவா்கள் இருவருக்கும் சா்வதேச போதைப் பொருள் கடத்தும் கும்பலுடன் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இருவரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments