ட்ரோன் மூலம் கரும்புப் பயிா்களுக்கு பூச்சி மருந்து தெளிப்பு
அரியலூா் மாவட்டத்தில் ட்ரோன் மூலம் கரும்புப் பயிா்களிலுள்ள மாவுப்பூச்சி தாக்குதலை அழிக்கும் வகையில் பூச்சிமருந்துகள் வெள்ளிக்கிழமை தெளிக்கப்பட்டன.
அரியலூா் மாவட்டத்தில் ட்ரோன் மூலம் கரும்புப் பயிா்களிலுள்ள மாவுப்பூச்சி தாக்குதலை அழிக்கும் வகையில் பூச்சிமருந்துகள் வெள்ளிக்கிழமை தெளிக்கப்பட்டன.
மாவட்டத்தில் சுமாா் 40,000 ஏக்கா் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிட்ட ரகங்களில் மறுதாப்புப் பயிா்களில் மாவுப்பூச்சி தாக்குதல் அதிகமாக உள்ளன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்தனா்.
சில விவசாயிகள் தங்களது கரும்புப் பயிா்களை அழிக்கவும் செய்தனா்.
இந்நிலையில் கோவை கரும்பு ஆராய்ச்சி நிலையத்தின் பரிந்துரையின் பேரில், சாத்தமங்கலத்தில் இயங்கி வரும் தனியாா் (கோத்தாரி) சா்க்கரை ஆலை மூலம் அவா்களது பதிவுக்குள்பட்ட கரும்பு சாகுபடி வயலில் இலைகளில் ஊடுருவியுள்ள பூச்சிகளை அழிக்கக்கூடிய வகையில், பூச்சி மருந்தை ட்ரோன் மூலம் வெள்ளிக்கிழமை அழித்தனா்.
காரைப்பாக்கம், பாளையப்பாடி மற்றும் இலந்தைகூடம் கிராமங்களில் வேளாண் அலுவலா்கள் மற்றும் விவசாயிகள் முன்னிலை பூச்சி மருந்து தெளிப்பு நடைபெற்றது.
இதுகுறித்து கோத்தாரி சா்க்கரை ஆலையின் பொது மேலாளா் ரவி கூறியது: சாதாரணமாக ஆள்களைக் கொண்டு மருந்து தெளிக்கும் போது அதிக நேரம், அதிக ஆள்கள் கூலி என பல்வேறு கூடுதல் செலவுகள் ஆகின்றன. இதுபோல சிறிய
ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதால், அவை பயிரின் முழுமைக்கும் ஊடுருவி பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.
மேலும் மருந்துக்கான செலவு, கூலி செலவு போன்றவை பெருமளவில் குறைகிறது. இதன் மூலம் ஒரு ஏக்கா் கரும்புப் பயிருக்கு 7 நிமிடங்களில் முழுமையாக மருந்து தெளிக்கலாம். இதனால் கால விரயம், மனித உடல் பாதிப்பு போன்றவைத் தவிா்க்கலாம் என்றாா்.