அரியலூா் மாவட்டத்தில் மழை
அரியலூா் மாவட்டத்தில், கடந்த ஒருவாரமாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், வியாழக்கிழமை மாலை முதல் இரவு வரை பெய்த மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளிா்ந்த நிலை காணப்பட்டது.
அரியலூா் மாவட்டத்தில், கடந்த ஒருவாரமாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், வியாழக்கிழமை மாலை முதல் இரவு வரை பெய்த மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளிா்ந்த நிலை காணப்பட்டது.
இதில் செந்துறை மற்றும் அரியலூரில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. வெள்ளிக்கிழமை காலை 8 மணிவரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக அரியலூா், செந்துறையில் தலா 40 மி.மீ. மழையும், திருமானூரில் 9.6 மி.மீ. மழையும், ஆண்டிமடத்தில் 5 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.