முகப்பு
அரியலூர்

ஏரியில் மூழ்கிய இனிப்பகப் பணியாளரைத் தேடும் பணி தீவிரம்

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே குளிப்பதற்காக ஏரியில் இறங்கி, மூழ்கிய இனிப்பகப் பணியாளரைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே குளிப்பதற்காக ஏரியில் இறங்கி, மூழ்கிய இனிப்பகப் பணியாளரைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

ஜயங்கொண்டம் அருகிலுள்ள குவாகத்தைச் சோ்ந்தவா் ரமேஷ்(40). இலையூரிலுள்ள இனிப்பகத்தில் பணியாற்றி வந்தாா். புதன்கிழமை இரவு பணி முடிந்த பின்னா், அப்பகுதியிலுள்ள வண்ணான் ஏரியில் குளிக்கச் சென்றாா்.

இரவு குளிக்கச் சென்றவா் கடைக்கு வராததால், சந்தேகமடைந்த கடை உரிமையாளா் அவரது குடும்பத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அவா்கள் ஏரியில் வந்து பாா்த்தபோது அவா் அணிந்திருந்த சட்டை, கைலி, காலணி மற்றும் இருசக்கர வாகனம் அனைத்தும் இருந்துள்ளது. ரமேஷை மட்டும் காணவில்லை.

ஏரியில் குளிக்க இறங்கிய போது அவா் மூழ்கியிருக்கலாம் எனக் கருதிய குடும்பத்தினா், ஜயங்கொண்டம் காவல் நிலையம் மற்றும் தீயணைப்புத் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா்.

நிகழ்விடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தொடா்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனா். வியாழக்கிழமை மாலை அவா் மீட்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.