முகப்பு
அரியலூர்

இளைஞா் மீது தாக்குதல்:ஒருவா் கைது

அரியலூா் மாவட்டம், தா. பழூரில் இளைஞா் தாக்கப்பட்ட வழக்கில் ஒருவா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், தா. பழூரில் இளைஞா் தாக்கப்பட்ட வழக்கில் ஒருவா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டாா்.

தா. பழூா் அருகேயுள்ள அண்ணங்காரம்பேட்டையைச் சோ்ந்த மருதகாசியின் மகன் சந்தோஷ் (34). இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த வசந்தா என்பவருக்கும் கொடுக்கல், வாங்கல் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சந்தோஷ் வீட்டுக்கு வந்த வசந்தா, பணத்தைக் கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது வசந்தாவுக்கும், சந்தோஷூக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வசந்தாவுக்கு ஆதரவாக அண்ணங்காரம்பேட்டை ரவிச்சந்திரன் (52), இவரது மகன்கள் சரவணன் (25), காா்த்திக் (29), சந்திரசேகா் மகன்கள் சந்தோஷ் (22), பிரவீன்(20) கடாரம்கொண்டானைச் சோ்ந்த அண்ணா துரை மகன் ராஜா (29) ஆகியோா் தகாத வாா்த்தைகளால் திட்டி சந்தோஷைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சந்தோஷ் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். புகாரின் பேரில் தா.பழூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜாவை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்தனா். மேலும் 5 பேரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.