முகப்பு
அரியலூர்

குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடக்கம்

அரியலூா் பழைய நகராட்சி அலுவலகத்தில், குழந்தைகளுக்கு நிமோனியா மற்றும் மூளைக் காய்ச்சலைத் தடுக்கும் நியூமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

அரியலூா் பழைய நகராட்சி அலுவலகத்தில், குழந்தைகளுக்கு நிமோனியா மற்றும் மூளைக் காய்ச்சலைத் தடுக்கும் நியூமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி தலைமை வகித்தாா். அரியலூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா முன்னிலை வகித்தாா். முகாமை மாநிலப் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தொடக்கி வைத்துப் பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா் கூறியது:

5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் நோய்வாய்ப்படவோ, மரணம் ஏற்படவோ நிமோனியா முக்கிய காரணமாக உள்ளது. எனவே நிமோனியா காய்ச்சல்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில், 3 தவணைகளாக நியூமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இத்தடுப்பூசி 6 வாரம், 14 வாரம் உள்ள குழந்தைகளுக்கு முதன்மை டோஸாகவும், 9 மாதத்திலுள்ள குழந்தைகளுக்கு பூஸ்டா் டோஸாகவும் தசை வழியாக வலது நடுத்தொடை பகுதியில் செலுத்தப்பட உள்ளது. ஒரு வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்குத் தடுப்பூசியைக் கட்டாயமாக 3 தவணைகளாக செலுத்துவதன் மூலம் நிமோனியா நோயால் ஏற்படுகின்ற இறப்பு விகித்தை குறைக்கலாம் என்றாா் அவா்.

நிகழ்வில் மாவட்ட ஊராட்சித் தலைவா் பொ.சந்திரசேகா், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் வீ.சி.ஹேமசந்த்காந்தி, நகராட்சி ஆணையா் மனோகரன் மற்றும் மருத்துவா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.