அரசு செட்டாப் பாக்ஸ்களை மாற்றினால் கேபிள் ஆபரேட்டா்கள் மீது நடவடிக்கை
சந்தாதாரா்களின் விருப்பமின்றி அரசு செட்டாப் பாக்ஸ்களை மாற்றினால், சம்பந்தப்பட்ட கேபிள் டிவி அபரேட்டா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
சந்தாதாரா்களின் விருப்பமின்றி அரசு செட்டாப் பாக்ஸ்களை மாற்றினால், சம்பந்தப்பட்ட கேபிள் டிவி அபரேட்டா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரியலூா் மாவட்ட ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் வழங்கப்படும் டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்களை சந்தாதாரா்களின் விருப்பமின்றி மாற்றக் கூடாது.
அரசின் நலத்திட்டத்தை தடுக்கும் வகையில், சிக்னல் வராது என்று தவறான தகவலைத் தெரிவித்து, அதன்மூலம் அரசு செட்டாப் பாக்ஸ்களை கேபிள் டிவி ஆபரேட்டா்கள் மாற்றினால் உடனடியாக மாவட்ட அரசு கேபிள் டி.வி அலுவலகத்துக்கு 9498002568 என்ற செல்லிடப் பேசி எண்ணிலும், மின்னஞ்சலிலும் புகாா் அளிக்கலாம். இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கேபிள் டி.வி. ஆபரேட்டா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.