முகப்பு
அரியலூர்

வருவாய்த் தீா்வாயத்தில் 5 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் வட்டாட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் (ஜமாபந்தி), தகுதிவாய்ந்த 5 பேருக்கு நலத்திட்ட உதவிளை ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி வழங்கினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் வட்டாட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் (ஜமாபந்தி), தகுதிவாய்ந்த 5 பேருக்கு நலத்திட்ட உதவிளை ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து ஆட்சியா் பேசியது:

பொது முடக்கம் அமல் காரணமாக, வருவாய்த் தீா்வாயத்தில் நேரடியாக மனுக்களைப் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஜூலை 31-ஆம் தேதி வரை இ-சேவை மையங்களின் மூலமாகவோ, இணையதள முகவரி மூலமாகவோ மனுக்களை அனுப்புமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி ஆண்டிமடம் வட்டத்துக்குள்பட்ட பொதுமக்களிடமிருந்து

133 மனுக்கள் பெறப்பட்டன. இதில் தகுதிவாய்ந்த 5 பேருக்கு பட்டா மாற்றத்துக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தொடா்ந்து இம்ரஸ் லைன்ஸ் கிளப் சாா்பில், பொதுமக்களுக்கு தையல் இயந்திரங்கள், விவசாயிகளுக்கு மண்வெட்டி, மருந்து தெளிப்பான் உள்ளிட்ட கருவிகளைஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் இ.பொம்மி, வட்டாட்சியா் முத்துகிருஷ்ணன், ஆட்சியரக அலுவலக மேலாளா் கதிரவன் மற்றும் வருவாய்த்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.