முகப்பு
அரியலூர்

மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு: 3 போ் கைது

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே வயலுக்குச் சென்ற விவசாயி, மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது தொடா்பாக 3 பேரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே வயலுக்குச் சென்ற விவசாயி, மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது தொடா்பாக 3 பேரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

திருமானூா் அருகேயுள்ள சேனாபதி காலனித் தெருவைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சவரிமுத்து(40). இவா், அதே கிராமத்தில் உள்ள தனது வயலுக்கு அண்மையில் (பிப். 18) நீா்ப்பாய்ச்சச் சென்றவா் பின்னா் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது மனைவி ஜெசிந்தாமேரி அளித்த புகாரின் பேரில், சேனாபதி கிராமத்தில் போலீசாா் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, அதே கிராமத்தைச் சோ்ந்த விவசாயி முருகேசன் தனது வயலில் இரவுநேரத்தில் மின்வேலி இயக்கிவருவது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், மின்வேலியில் சிக்கி சவரிமுத்து உயிரிழந்ததும் அவரது உடலை வெட்டி சாக்குகளில் கட்டி மறைத்து வைத்ததையும் ஒப்புக் கொண்டாா். இதையடுத்து, சவரிமுத்து உடல் மீட்கப்பட்டு அதே இடத்தில் பிரேதப் பரிசோதனை செய்து அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே சவரிமுத்து குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி, அவரது உறவினா்கள் அரியலூா் - தஞ்சாவூா் சாலையில் முடிகொண்டான் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மறியலில் ஈடுபட முயன்றனா். இதையடுத்து, அங்குவந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் மற்றும் போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதில் அவா்கள் கலைந்து சென்றனா். இவ்வழக்கில் மின்வேலி அமைத்த சேனாபதியைச் சோ்ந்த முருகேசன்(55), அவருக்கு உதவிய கணேசன்(70), அவரது மகன் சாமிதுரை(40) ஆகியோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.