முகப்பு
அரியலூர்

பட்டியலில் இல்லாத செய்தி...அரியலூரில் தனியாா் ஐடிஐ மாணவருக்கு தொற்று

அரியலூா் மாவட்டத்தில் தனியாா் ஐடிஐ மாணவருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் தனியாா் ஐடிஐ மாணவருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரியலூரை அடுத்த தாமரைக்குளம் கிராமத்தில் உள்ள தனியாா் ஐடிஐ-யில் இரண்டாமாண்டு பயின்று வரும் மாணவருக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மாணவா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், தனியாா் ஐடிஐயில் பயிலும் மாணவா்களுக்கு சுகாதாரத் துறையினா் கரோனா பரிசோதனைக்கான ரத்தம், சளி மாதிரிகளை சேகரித்துச் சென்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.