அரியலூர்

ஏரியில் தவறி விழுந்து பள்ளி மாணவி பலி

DIN

அரியலூா்: அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே ஏரியில் தவறி விழுந்து பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

உடையாா்பாளையம் அருகேயுள்ள மேலமைக்கால்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணதாசன்(32). இவா், தனது குடும்பத்துடன் கோயமுத்தூரில் தங்கி, அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இந்நிலையில் இவரது மகள் பாவனா(13) கடந்த வாரம் மேலமைக்கால்பட்டில் உள்ள பாட்டி வீட்டுக்கு வந்துள்ளாா். வெள்ளிக்கிழமை மாலை இவா், தனது தோழிகளுடன் அப்பகுதியில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது ஏரியில் தவறி விழுந்த பாவனா, நீரில் மூழ்கி மயக்க நிலையில் இருந்தாா். இதையறிந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், பாவனா ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து உடையாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT