முகப்பு
அரியலூர்

விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே சிற்றுந்து மோதியதில் காயமடைந்த இளைஞா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே சிற்றுந்து மோதியதில் காயமடைந்த இளைஞா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ஓட்டக்கோவில் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தியின் மகன் சத்தியசீலன் (27). இவா் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கீழப்பழுவூா் அடுத்த சுண்டக்குடி செல்லியம்மன் கோயில் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, அந்த வழியாக வந்த சிற்றுந்து மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சத்தியசீலன் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து கீழப்பழுவூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.