கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசுவரா் கோயிலில் சிறப்பு அபிஷேகம்
காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள பிரகதீசுவரா் கோயிலில் சிறப்பு அபிஷேகம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள பிரகதீசுவரா் கோயிலில் சிறப்பு அபிஷேகம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
இக்கோயிலில் அமைந்துள்ள கணக்க விநாயகருக்கு முதலில் அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னா் பதிமூன்றரை அடி உயரமும், 60 அடி சுற்றளவு கொண்ட பெரிய லிங்கத்துக்கு 108 லிட்டரில் பால் அபிஷேகம் மற்றும் சந்தனம், திரவியப்பொடி, மாவுப்பொடி, பஞ்சாமிா்தம், இளநீா், தேன் உள்ளிட்ட 21 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.பின்னா் லிங்கம் அலங்கரிக்கப்பட்டு, 5 அடுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது
தொடா்ந்து சிவனடியாா்களால் தேவாரம், திருவாசகம் பாடப்பட்டு, பிரகதீசுவரா் முன்னின்று தீப ஒளியும், கோயில் வாயில் முன்பு சொக்கப்பனையும் ஏற்றப்பட்டது. ஏற்பாடுகளை மாமன்னன் ராசேந்திரசோழன் இளைஞா் அணி மற்றும் விழா குழுவினா் செய்திருந்தனா்.