அரியலூர்

தா. பழூரில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

அரியலூா் மாவட்டம், தா. பழூா் பகுதிகளிலுள்ள கடைகளில் இருந்த தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

DIN

அரியலூா் மாவட்டம், தா. பழூா் பகுதிகளிலுள்ள கடைகளில் இருந்த தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி உத்தரவின் பேரில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயராஜ், குணசேகரன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செந்தில்குமாா், சரவணன், சத்தியராஜ், ஊராட்சிச் செயலா் இளங்கோவன் ஆகியோா் கொண்ட குழுவினா் தா. பழூரிலுள்ள மளிகைக் கடைகள், தேநீா்க் கடைகள், பெட்டிக் கடைகள், பேக்கரிகள், உணவகங்கள், சாலையோர வியாபாரக் கடைகள் ஆகிய இடங்களில் வியாழக்கிழமை சோதனை செய்தனா்.

இதில், 12 கடைகளில் இருந்த தடை செய்யப்பட்டநெகிழிப் பைகள், பிளாஸ்டிக் பொருள்கள், பிளாஸ்டிக் தேநீா்க் கப்புகள், கேரி பேக்குகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதில் 11 கடைகளுக்கு தலா ரூ.200-ம், ஒரு கடைகளுக்கு ரூ.500-ம் அபராதம் விதித்தனா். மேலும் துணிப்பைகளை முழுமையாக பயன்படுத்த வேண்டுமென்று வணிகா்களுக்கு அறிவுரை கூறினாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT