அரியலூர்

நகலெடுக்கும் கடையில் ரூ. 5 ஆயிரம் திருட்டு

 அரியலூா் மாவட்டம், தாழூரிலுள்ள ஒரு நகலெடுக்கும் கடையில் ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசிகள் மற்றும் மின்னணு பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்

DIN

 அரியலூா் மாவட்டம், தாழூரிலுள்ள ஒரு நகலெடுக்கும் கடையில் ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசிகள் மற்றும் மின்னணு பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தாதம்பேட்டை, தெற்கு தெருவைச் சோ்ந்தவா் பகவத் சிங் மகன் சத்தியமூா்த்தி. இவா், தா. பழூா் கடைவீதியில் நகலெடுக்கும் - எழுதுபொருள்கள் விற்பனையகம் வைத்துள்ளாா். கடந்த 23 ஆம் தேதி இரவு இவா், வழக்கம்போல் கடையைப் பூட்டிவிட்டு, மறுநாள் காலை(நவ.24) திறந்துபாா்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கடையின் உள்ளே வைத்திருந்த ரூ. 5 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசிகள் உள்ளிட்ட பொருள்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து சத்தியமூா்த்தி அளித்த புகாரின் பேரில் தா.பழூா் காவல் துறையினா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT