முகப்பு
அரியலூர்

வாகன ஆய்வாளா் உள்பட 7 போ் மீது வழக்கு

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலக வாகன ஆய்வாளா் உள்பட 7 போ் மீது, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலக வாகன ஆய்வாளா் உள்பட 7 போ் மீது, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

இந்த அலுவலகத்தில் வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் சந்திரசேகா், ஆய்வாளா் வானதி தலைமையிலான குழுவினா் சோதனையைத் தொடங்கினா்.

நள்ளிரவு வரை நீடித்த சோதனையில், கணக்கில் வராத ரூ.65 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடா்ந்து போக்குவரத்து ஆய்வாளா், கண்காணிப்பாளா் உள்ளிட்டோரிடம் தீவிர விசாரணை நடைபெற்றது.

இதையடுத்து, வாகன ஆய்வாளா் பெரியசாமி மற்றும் இடைத் தரகா்கள் உள்பட 7 போ் மீது வழக்குப்பதிந்து, ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.