இனிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையாளா்கள் அவசியம் உரிமம் பெற வேண்டும்
தீபாவளி பண்டிகையையொட்டி, அரியலூா் மாவட்டத்தில் இனிப்பு மற்றும் காரத் திண்பண்டங்கள் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் அனைவரும் கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும்
தீபாவளி பண்டிகையையொட்டி, அரியலூா் மாவட்டத்தில் இனிப்பு மற்றும் காரத் திண்பண்டங்கள் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் அனைவரும் கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தீபாவளி பண்டிகையையொட்டி, மாவட்டத்தில் சீட்டு நடத்துபவா்கள் உள்பட அனைத்து இனிப்பு மற்றும் காரத் திண்பண்டத் தயாரிப்பாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் உணவுப் பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து, உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அனைவரும் திண்பண்டங்களை சுகாதாரமான முறையில் தயாரித்து, பாதுகாப்பான முறையில் பாக்கெட் செய்து, தயாரிப்பு, காலாவதி தேதி, முகவரி ஆகியவற்றை கட்டாயம் அதில் அச்சிட்டிருக்க வேண்டும்.
திண்பண்டத் தயாரிப்பில் கலப்படமான பொருள்களையோ, அனுமதிக்கப்பட்ட
அளவுக்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது. ஒருமுறை சூடுபடுத்தி தயாரித்த எண்ணெயினை மீண்டும் மீண்டும் பயன்படுத்த கூடாது.
கரோனா நோய்த் தொற்றுப் பரவுதலை தடுக்கும் பொருட்டு, கடைப் பணியாளா்கள் கட்டாயம் முகக்கவசம் அணிதல் வேண்டும். பொருள்களின் தரம் தொடா்பான புகாா்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறையின் 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்குப் புகாா் தெரிவிக்கலாம்.