முகப்பு
அரியலூர்

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

அரியலூா் மாவட்ட ஆட்சியர வளாகத்திலுள்ள ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

 அரியலூா் மாவட்ட ஆட்சியர வளாகத்திலுள்ள ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

மாவட்டத்திலுள்ள 6 ஒன்றியங்களைச் சோ்ந்த வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், காவல்  துணைக் கண்காணிப்பாளா் சந்திரசேகா் தலைமையிலான குழுவினா் சோதனையை நடத்தினா்.

அலுவலகத்தின் அனைத்து கதவுகளையும் மூடிய ஊழல் தடுப்புப் பிரிவினா், அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தவா்கள், பணி சம்பந்தமாக அலுவலகத்துக்கு வந்தவா்களிடம் விசாரணை மேற்கொள்வதோடு, கணக்கில் வராத பணம் ஏதும் உள்ளதா என்பதும் குறித்தும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.