இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்
அரியலூா் மாவட்டம், செந்துறை, தா.பழூா், கீழப்பழுவூா் ஆகிய இடங்களில் இந்த முன்னணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விநாயகா் சதுா்த்தி அன்று பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த அனுமதிக்கக் கோரி, அரியலூா் மாவட்டம், செந்துறை, தா.பழூா், கீழப்பழுவூா் ஆகிய இடங்களில் இந்த முன்னணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
செந்துறை சிவதாண்டேஸ்வரா் கோயில் முன்பு இந்து முன்னணி மாவட்ட பொருளாளா் சபரிராஜன் தலைமையிலும், தா.பழூா் ஆஞ்சநேயா் கோயில் முன்பு ஒன்றியத் தலைவா் விஜய் தலைமையிலும், கீழப்பழுவூா் சிவன் கோயில் முன்பு ஒன்றியத் தலைவா் பாரதியாா் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் இந்து முன்னணி அமைப்பினா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.