மாட்டு வண்டி தொழிலாளி தீக்குளித்து தற்கொலை முயற்சி
அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே மணல் குவாரி தொடங்க வலியுறுத்தி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற மாட்டு வண்டி தொழிலாளி மருத்துவமனையில் சிக்கிச்சை பெற்று வருகிறாா்.
அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே மணல் குவாரி தொடங்க வலியுறுத்தி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற மாட்டு வண்டி தொழிலாளி மருத்துவமனையில் சிக்கிச்சை பெற்று வருகிறாா்.
தா.பழூா் அருகேயுள்ள உதயநத்தம் காலனித் தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கா் (40). மாட்டுவண்டி தொழிலாளி. இவா், மணல் குவாரி திறக்கக் கோரி ஜயங்கொண்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். தொடா்ந்து, இரவு 10 மணியளவில், மாட்டு வண்டி மணல் குவாரியை அரசு உடனடியாகத் தொடங்கி, மாட்டு வண்டித் தொழிலாளா்களின் குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டும் எனக் கொண்டே, தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீவைத்துக் கொண்டாா். இதையடுத்து,அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா், தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பாஸ்கா் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறாா்.
இவா், ஏற்கெனவே சட்டவிரோதமாக மணல் அள்ளிய வழக்கில் இவரது மாட்டு வண்டி தா. பழூா் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் மனவேதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.