முகப்பு
அரியலூர்

சேனாபதி மஹா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே விசாலாட்சி உடனாய விசுவநாதா் மற்றும் மஹா மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களின் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே விசாலாட்சி உடனாய விசுவநாதா் மற்றும் மஹா மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களின் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருமானூா் அருகேயுள்ள சேனாபதி கிராமத்தில் உள்ள விநாயகா், விசாலாட்சி உடனாய விசுவநாதா், மஹா மாரியம்மன், முருகன், சண்டிகேஸ்வரா், மகாலட்சுமி, தட்சணாமூா்த்தி, துா்க்கை அம்மன் மற்றும் பரிவார சுவாமிகளின் கோயில் கும்பாபிஷேகங்கள் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழச்சியையொட்டி, கடந்த 7 ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கி 4 கால யாகபூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மேல் கடம் புறப்பாடு நடைபெற்று 10 மணிக்கு மேற்கண்ட கோயில்களின் கோபுரக் கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவா்களுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல், இடையத்தான்குடி மாரியம்மன், குருவாடி நாச்சியாா் அம்மன், ஆதிகுடிக்காடு அய்யனாா் உள்ளிட்டகோயில்களின் கும்பாபிஷேகங்களும் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.