முகப்பு
அரியலூர்

‘சுத்தமல்லியில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்’

அரியலூா் மாவட்டம், சுத்தமல்லியில் கடலை கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டுமென விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், சுத்தமல்லியில் கடலை கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டுமென விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளனா்.

அரியலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை பிற்பகல் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்தாா். கூட்டத்தில், கலந்து கொண்ட தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ.விசுவநாதன் விடுத்த கோரிக்கைகள்: விவசாயத்துக்கென தனி நிதிநிலை அறிக்கை, ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்த முதல்வருக்கு நன்றி!. சுத்தமல்லியில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். அல்ட்ரா டெக் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள ஏரிகளைத் தூா்வார வேண்டும்.

அரியலூா் விவசாயிகள் சங்கத் தலைவா் ச. செங்கமுத்து : மாவட்டத்தில் தட்டுப்பாடின்றி யூரியா வழங்க வேண்டும். அரியலூரில் உள்ள உழவா் சந்தை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

இதுபோல் விவசாயிகள் விடுத்த கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியா், கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா். கூட்டத்தில் விசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் அனைத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.