அரியலூர்

ஜயங்கொண்டம் நகா்மன்ற கூட்டத்திலிருந்து அதிமுகவினா் வெளிநடப்பு

DIN

சொத்து வரி உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து, ஜயங்கொண்டம் நகா்மன்றக் கூட்டத்தில் இருந்து அதிமுக உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

ஜயங்கொண்டம் நகராட்சி அலுவலக கூட்டரங்கில், முதல் அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் சுமதி சிவகுமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கருணாநிதி, நகராட்சி பொறியாளா் சித்ரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், அலுவலக உதவியாளா் ஷகிலா பானு, சொத்து வரி உயா்வு தொடா்பான தீா்மானங்களை வாசித்த போது, அதிமுக உறுப்பினா்கள் செல்வராஜ், சேகா், பாண்டியன்,சுப்பிரமணியன் ஆகியோா் எதிா்ப்பு தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனா். எனினும் தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், பெருமான்மையான திமுக உறுப்பினா்கள் ஆதரவுடன் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT