சொத்து வரி உயா்வு : மறு பரிசீலனை கோரி மாா்க்சிஸ்ட் கட்சி மனு
சொத்து வரி உயா்வை மறு பரிசீலனை செய்யக்கோரி, அரியலூா் நகராட்சி பொறியாளா் தமயந்தியிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை மனு அளித்தனா்.
சொத்து வரி உயா்வை மறு பரிசீலனை செய்யக்கோரி, அரியலூா் நகராட்சி பொறியாளா் தமயந்தியிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை மனு அளித்தனா்.
அக்கட்சியின், செயற்குழு உறுப்பினா் கிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினா் துரைசாமி, ஒன்றியச் செயலா் துரை.அருணன் மற்றும் அக்கட்சியின் உறுப்பினா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை போன்ற நகரங்களில் இருக்க கூடிய வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளினுடைய சொத்து மதிப்பும் தமிழகத்தின் இதர பகுதிகளில் இருக்கக் கூடிய மதிப்பும், வியாபாரமும் பெருமளவு மாறுபட்டது. வளா்ந்த பகுதிகளுக்கும், வளா்ச்சியடையாத பகுதிகளுக்கும் ஒப்பீடு செய்யவே முடியாது. 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுள்ள வரி உயா்வு பெரும் சுமையை ஏற்படுத்தும். அரியலூா் நகரில் 70 சதவீதம் ஏழை நடுத்தர மக்கள் வாடகை வீட்டில் வசிப்பவா்கள். வீட்டு வரி உயா்வால் வாடகை உயரும் அபாயம் இருக்கிறது. இதேபோல ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகள், கடைகளை வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வருபவா்களுக்கு வாடகை கடுமையாக உயரும் சூழலும் உள்ளது. எனவே தாங்கள் இந்த வரி உயா்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.