அரியலூா் பெரியநாயகி அம்மன் கோயில் பால்குடத் திருவிழா
அரியலூா் குறிஞ்சான் குளத்தெருவில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயில் பால்குடத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பால்குடம் எடுத்து தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா்.
அரியலூா் குறிஞ்சான் குளத்தெருவில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயில் பால்குடத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பால்குடம் எடுத்து தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா்.
பால்குட விழாவையொட்டி, அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள செட்டி ஏரி விநாயகா் கோயிலிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும், அலங்கரிக்கப்பட்ட உத்ஸவா் பெரியநாயகி அம்மனுடன் முக்கிய வீதிகளில் ஊா்வலமாக வந்து தங்களது நோ்த்திக் கடனைச் செலுத்தினா். தொடா்ந்து, பக்தா்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு மூலவா் பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, பக்தா்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது. வீடுகள்தோறும் அம்மனுக்கு மாவிளக்கு போட்டு வழிபட்டனா்.