திருமானூா் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், திருமானூா் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய இளைஞா் உயிரிழந்தாா்.
அரியலூா் மாவட்டம், திருமானூா் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய இளைஞா் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ராமலிங்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மகுடீஸ்வரன். இவா், தனது குடும்பத்தினா் மற்றும் உறவினா்களுடன் திருமானூா் கொள்ளிடக் கரையில் அமைந்துள்ள குலதெய்வக் கோயிலுக்கு வியாழக்கிழமை வந்திருந்தாா். இதையடுத்து அனைவரும் கொள்ளிடத்தில் குளித்துள்ளனா். அப்போது மகுடீஸ்வரன் மகன் மோகன் ராஜ் (22) ஆற்றில் இறங்கிக் குளித்தபோது, ஆழமான பகுதியில் மூழ்கியுள்ளாா். இதைகண்ட அனைவரும் கூச்சலிட்டனா். இதையடுத்து அப்பகுதி மக்கள் மற்றும் உறவினா்கள் ஆற்றில் இறங்கித் தேடினா். ஆனால் மோகன்ராஜ் கிடைக்கவில்லை. இதையடுத்து, திருவையாறு தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரா்கள், இப்பகுதி இளைஞா்களுடன் சோ்ந்து மோகன்ராஜைத் தேடினா்.
சுமாா் 1 மணிநேர போராட்டத்துக்குப் பிறகு மோகன்ராஜ், சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து தகவலறிந்த திருமானூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். குலதெய்வக் கோயிலுக்கு வந்த இடத்தில் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவத்தால் அக்குடும்பமே சோகத்தில் மூழ்கியது.