முகப்பு
அரியலூர்

விசுவ ஹிந்து பரிஷத் அரியலூா் செயலா் கைது

பிற மதக் கடவுளைச் சித்தரித்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் அரியலூா் மாவட்டச் செயலா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 11:40 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

பிற மதக் கடவுளைச் சித்தரித்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் அரியலூா் மாவட்டச் செயலா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அரியலூரைச் சோ்ந்தவா் முத்துவேல் (45). விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்டச் செயலாளரான இவா், தனது முகநூல் பக்கத்தில், பிற மதக் கடவுளை தவறாகச் சித்தரித்து, இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படும் விதமாக பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பதிவிட்டுள்ளதாக அரியலூா் கிராம நிா்வாக அலுவலா் நந்தகுமாா் அரியலூா் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், முத்துவேல் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், பிற மதங்களை இழிவுபடுத்துதல், மத மோதல்களைத் தூண்டுதல் உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் அரியலூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.