கோப்புப்படம் 
அரியலூர்

திருமானூர் அருகே வாய்க்காலில் குளித்த 2 மாணவிகள் நீரில் மூழ்கி பலி

திருமானூர் அருகே பாசன வாய்க்காலில் சனிக்கிழமை குளித்த மாணவிகள் இருவர், நீரில் மூழ்கி பலியாகினர்.

DIN

திருமானூர் அருகே பாசன வாய்க்காலில் சனிக்கிழமை குளித்த மாணவிகள் இருவர் நீரில் மூழ்கி பலியாகினர்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த வெற்றியூர் காலனித் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகள் மகாலட்சுமி(19). இவர் கல்லூரி முதலாமாண்டு படித்து வந்தார். இவரது வீட்டுக்கு உறவினரான கரைவெட்டி கிராமத்தைச் சேர்ந்த குமரவேல் மகள் திவ்யபிரியா(14) விடுமுறைக்கு வந்துள்ளார். இவர் அதே கிராமத்தில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், மேற்கண்ட இருவரும், அதே பகுதியைச் சேர்ந்த மேலும் சில சிறுமிகளுடன் அருகேயுள்ள புள்ளம்பாடி பாசன வாய்க்காலுக்கு சனிக்கிழமை மாலை குளிக்கச் சென்றுள்ளனர். வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக செல்வது தெரியாததால், 6 சிறுமிகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அப்போது சிறுமிகள் கூச்சலிட்டதையடுத்து கிராம மக்கள் ஓடிவந்து, வாய்க்காலில் இறங்கி தேடியதில் மகாலட்சுமி, திவ்யபிரியா ஆகியோர் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர். 

மற்ற 4 சிறுமிகள் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். தகவலறிந்து வந்த கீழப்பழுவூர் காவல் துறையினர், சிறுமிகளின் உடல்களை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாய்க்காலுக்கு குளிக்கச் சென்ற சிறுமிகள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவில்பட்டியில் நாராயணசாமி நாயுடு நினைவு தினம்

எஸ்.ஐ. பணி எழுத்துத் தோ்வு: 5,056 போ் எழுதினா்

பெருந்துறை அருகே 3 வீடுகளில் திருடியவா் கைது

சென்னிமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முப்பெரும் விழா

ரயில் சேவைகள் கோரி முதல்வரிடம் மனு

SCROLL FOR NEXT