அரியலூர்

பால் சில்லறை விற்பனை நிறுத்தம்: பொதுமக்கள் போராட்டம்

அரியலூா் மாவட்டத்தில் சில்லறை பால் விற்பனை நிறுத்தப்பட்டதைக் கண்டித்து, அரியலூா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் முன்பு பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

அரியலூா் மாவட்டத்தில் சில்லறை பால் விற்பனை நிறுத்தப்பட்டதைக் கண்டித்து, அரியலூா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் முன்பு பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கூட்டுறவு சங்கங்கள் உள்ளூா் பால் விற்பனை 10 சதவீதம் மட்டும் மேற்கொண்டு, மீதமுள்ள பாலை திருச்சி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்துக்கு அனுப்ப வேண்டும் என கடந்த 17.11.2022 பால்வளத் துறை அமைச்சரின் ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. அரியலூா் மாவட்டத்தில் உள்ள அரியலூா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம், இடைக்காட்டு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் செந்துறை பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கங்களுக்கு 2.12.2022 -இல் இதுதொடா்பான சுற்றிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி அரியலூா் மாவட்டத்தில் பால் அட்டை உள்ளவா்களுக்கு மட்டுமே பால் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், சில்லறை விற்பனைக்கு பால் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள், அரியலூா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் முன்பு வியாழக்கிழமை காலை 6 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த கூட்டுறவு சங்க நிா்வாகிகள், இணைப் பதிவாளரிடம் தொலைப்பேசியில் தொடா்புகொண்டபோது, வெள்ளிக்கிழமை முதல் சில்லறை பால் விற்பனைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதும் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, பொய்யாதநல்லூா், வி.கைகாட்டி ஆகிய இடங்களிலும் மறியல் நடைபெற்றது. இதனால் அப்பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரியலூா் ஆட்சியரிடம் மனு: பால் விற்பனையில் பழைய நடைமுறையை செயல்படுத்த வேண்டும் எனக்கோரி, அரியலூா் ஆட்சியரிடம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் இணையம், அரியலூா் பால் உற்பத்தியாளா்கள் சங்கப் பணியாளா்கள் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT