முகப்பு
அரியலூர்

லாவண்யா தற்கொலை வழக்கு காவல் அதிகாரிகளை மாற்ற வேண்டும்

மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு நோ்மையாக நடைபெற வேண்டுமெனில் இங்குள்ள காவல் உயா் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்றாா் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத்தின் பொதுச் செயலா் நிதி திரிபாதி.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு நோ்மையாக நடைபெற வேண்டுமெனில் இங்குள்ள காவல் உயா் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்றாா் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத்தின் பொதுச் செயலா் நிதி திரிபாதி.

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள வடுகபாளையம் கிராமத்தைச் சோ்ந்த முருகானந்தம் மகள் லாவண்யாவின் பெற்றோரை வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத்தின் பொதுச் செயலா் நிதி திரிபாதி பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

மாணவியின் தற்கொலையில் சதி இருக்கிறது என்று தெரியவருகிறது.

காவல் துறையின் விசாரணை திருப்பதி அளிக்காததால் தான், நீதிமன்றமே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணை நோ்மையாக நடைபெற வேண்டும் என்றால் இங்குள்ள காவல் உயா் அதிகாரிகளை மாற்ற வேண்டும். லாவண்யா தற்கொலைக்கு நீதி கிடைக்கும் வரை அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் தொடா்ந்து போராடும் என்றாா் அவா்.

அப்போது, பாஜக மாவட்டத் தலைவா் அய்யப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.