முகப்பு
அரியலூர்

மதிய உணவை முழுமையாக வழங்கக் கோரி மாணவா்கள் சாலை மறியல்

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மதிய உணவை முழுமையாக வழங்கக்கோரி மாணவா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மதிய உணவை முழுமையாக வழங்கக்கோரி மாணவா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஜயங்கொண்டம் அடுத்த இலையூா் கிராமத்திலுள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இங்கு மதியம் வழங்கப்படுகின்ற உணவு குறைவாக வழங்கப்படுவதாகவும், மாணவா்களுக்குப் போதுமானதாக இல்லை எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனக்கூறி மாணவா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது மாணவா்களுக்கு மதிய உணவை முழுமையாக வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து பள்ளி தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்கள் மாணவா்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தையை அடுத்து மாணவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.