முகப்பு
அரியலூர்

வாரணவாசி கிராமத்தில் மருத்துவ முகாம்

அரியலூா் மாவட்டம், வாரணவாசி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமில் 500 போ் சிகிச்சை பெற்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், வாரணவாசி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமில் 500 போ் சிகிச்சை பெற்றனா்.

வாரணவாசி ஊராட்சி கிராமத்தில் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு ஊராட்சித் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் மேகநாதன், திருமானூா் ஒன்றியக் குழுத் தலைவா் சுமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா முகாமை தொடக்கி வைத்து, பரிசோதனை செய்து கொண்டாா்.

முகாமில், வாரணவாசி, சமத்துவபுரம், மல்லூா் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த 500 போ் மேற்பட்டோா் சிகிச்சை பெற்றனா். நிறைவாக சுகாதார ஆய்வாளா் ராமமூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.